விளையாட்டு

பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கட் தொடரில் இருந்து சிறந்த துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக இந்த தொடரியில் இருந்து விலகியுள்ளார்.

எனினும் குசல் ஜனித்பெரேராவுக்கு பதிலாக சகலதுறை வீரர், மிலிந்த சிறிவர்தன இலங்கை அணிக்கு அழைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை தம்புள்ளை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் – வீரர்கள் பதிவு இன்று ஆரம்பம்

வெற்றியாளர் கிண்ண தொடர் – பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

LPL தொடரில் களமிறங்கும் யாழ் ஸ்டேலியன் கழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள்