பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகள் சைமா வாஜேத் புதுல் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராகக் குடியிருப்பு நிலத்தைக் கையகப்படுத்தியமை தொடர்பான ஊழல் வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் போராட்டம் காரணமாக பங்களாதேஷ் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக பங்களாதேஷ் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் இடைக்கால அரசு, இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், ஷேக் ஹசீனா , மகள் சைமா வாஜெத் புதுலு ஆகியோர் மீது அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணைக்குழு சட்டவிரோதமாகக் குடியிருப்பு நிலத்தைக் கையகப்படுத்தியதாகக் குற்றம்சாட்டியது.
இருவரும் தலைமறைவாக இருப்பதாக, ஊழல் தடுப்பு ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இதனை ஏற்றுக் கொண்ட டாக்கா சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் எதிராகப் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
மேலும், இது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க, மே மாதம் 4 ஆம் திகதி விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.