விளையாட்டு

நோவக் ஜோகோவிச் இற்கு வெற்றி

(UTV |  பிரான்ஸ்) – பிரென்ஞ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இடம்பெற்ற இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.

மிகுந்த எதிர்பார்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை நோவோக் ஜோகோவிச்சை எதிர்த்து போட்டியிட்ட கிரீஸ் நாட்டு வீரர் சிட்சிபாஸ் கைப்பற்றினார்.

அடுத்த மூன்று செட்களை 6 க்கு 3, 6 க்கு 2, 6 க்கு 4 என கைப்பற்றி நோவக் ஜோகோவிச் பட்டத்தை வென்றார்.
இது அவர் வென்றுள்ள 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.

அத்துடன் இரண்டாவது முறையாகவும் அவர் பிரென்ஞ் பகிரங்க டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் அன்டி முர்ரேவுக்கு

பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி ஜனவரியில்

232 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை