சூடான செய்திகள் 1

நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

(UTV|COLOMBO) நாட்டிற்கு வருகை தந்துள்ள நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் தனது விஜயத்தின்போது நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் கவனம் செலுத்தவுள்ளதாக, இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக சுமார் 7 மில்லியன்அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் விசேட சோதனை

பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு மங்கள கடிதம்

இளையோர் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பாரமிக்கு சர்வதேச பயிற்றுநர்