சூடான செய்திகள் 1

நோர்வூட்டில் இரு தரப்பினரிடையே மோதல்: ஐவர் காயம்

(UTV|COLOMBO)-மஸ்கெலியா பிரதேச சபை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நோர்வூட் நகரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று(28) மாலை 6.30 அளவில் நோர்வூட் நகரில் மோதல் வலுப்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும், தொழிலாளர் தேசிய முன்னணியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் நோர்வூட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலின் போது இரண்டு ஜீப் வண்டிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.

மஸ்கெலியா பிரதேச சபையின் புதிய தலைவரின் தெரிவு தொடர்பில் நேற்று முற்பகல் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த நிலையில் மஸ்கெலியா நகரில் பொலிஸாரின் தலையீட்டுடன் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

தவிசாளர் தெரிவுக்கு பின்னர் இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.

அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் மஸ்கெலியா நகரில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புப் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

மழை மற்றும் காற்றுடனான வானிலை