உள்நாடு

நோர்டன் பிரிட்ஜ் மண்சரிவில் ஒருவர் பலி

(UTV | நாவலப்பிட்டி) – நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள டெப்லோ பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை இந்த மண்சரிவு பதிவாகியுள்ளதுடன், அது தொடர்பான மண்மேடு இரண்டு வீடுகள் மீது சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவரின் உடல் வீடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

அவர் 39 வயதான டெப்லோ தெருவில் வசிப்பவர்.

சடலம் நாவலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவினால் 08 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்கள் நோர்டன் பிரிட்ஜ் தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களுக்கான நலன்புரி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related posts

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு ? எனக்கு எதுவும் தெரியாது – மாவை சேனாதிராஜா

editor

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

கோட்டா திறமையான அரசியல்வாதி அல்ல