வகைப்படுத்தப்படாத

நோட்ரே-டேம் தேவாலயம் 5 வருடங்களில் சீரமைக்கப்படும்

(UTV|FRANCE) 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவை 5 வருடங்களில் சீரமைக்கப்படும் என்று ஜனாதிபதி மெக்ரான் தெரிவித்துள்ளார்.

 பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிந்து வருகிறது.

பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான 850 வருடங்கள் பழைமைவாய்ந்த நோட்ரே டேம் (Notre – Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், மணிக்கோபுரங்கள் இரண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், பேராலயத்துக்குள் உள்ள கலைப்படைப்புக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது,
இந்த தீ விபத்து ஒரு மிக மோசமான சோக நிகழ்வு, இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து புகழ்பெற்ற இந்த தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவோம். இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டும் பணி தொடங்கப்படும். தேவாலயத்தை ஏற்கனவே இருந்ததைவிட மிக அழகாக கட்டுவோம். அடுத்த 5 வருடத்திற்குள் தேவாலயம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகிறேன். மனித தவறுகளால் ஏற்படும் பாதிப்புகளை நிறைய முறை சரிசெய்துள்ளோம். அந்த வகையில் இதையும் விரைந்து சரிசெய்வோம் என்றார்.

Related posts

காலியில் மூன்று மாடி ஆடை விற்பனையகத்தில் தீ

சுவிட்ஸர்லாந்து விமான விபத்தில் 20 பேர் பலி!

கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்டது முன்பள்ளிக் கூரை