கேளிக்கை

நைஜீரிய சிறுவர்களை ஈர்த்த ‘ஜகமே தந்திரம்’

(UTV |  சென்னை) – சமீபத்தில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரெய்லர் நைஜீரிய சிறுவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலானால், உடனடியாக அதே பாணியில் நடித்து வீடியோக்களை வெளியிடுவார்கள். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தின் சண்டைக் காட்சியில் சிறுவர்கள் அப்படியே தத்ரூபமாக நடித்த வீடியோ வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அந்த வரிசையில், தற்போது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரெய்லரும் இணைந்துள்ளது. நைஜீரிய சிறுவர்களின் இந்த மெனக்கெடல் ‘ஜகமே தந்திரம்’ படக்குழுவினரையும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. நைஜீரிய சிறுவர்களின் ட்ரெய்லரையும், ‘ஜகமே தந்திரம்’ ட்ரெய்லரையும் இணைத்து ட்விட்டர் வீடியோவாக வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.

ஜூன் 18-ம் திகதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம். இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்க தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Related posts

அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பு!!

அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு

நயன்தாரா விக்னேஷ் சிவன் காதலை மையப்படுத்தி திரைப்படம்