உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 168 பேர் கைது

(UTV | கொழும்பு) -தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 780 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (28) அதிகாலை 4.00 மணி முதல், இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியினுள் 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கை கடந்த 26ஆம் திகதி காலை 4.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள், முகக் கவசங்களை அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

SLPPவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ஷ!

22வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியீடு

பொருளாதார பிரச்சினைக்கு, வரவு-செலவுத்திட்டம் மூலம் தீர்வு- வவுனியாவில் ஜனாதிபதி ரணில்