உள்நாடு

நேற்றைய கலவரத்தில் இதுவரையில் 45 பேர் கைது

(UTV | கொழும்பு) – பெங்கிரிவத்தை வீதியில் நேற்று(31) இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பஸ் ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் , 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பஸ் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.

சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts

இளைஞர் யுவதிகளுக்கு இலத்திரனியல் அடையாள அட்டை

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்று உறுதி