உள்நாடு

நேற்று 597 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 43,299 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று கொவிட்-19 நோயுடன் அடையாளம் காணப்பட்ட 597 பேரில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 526 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய 66 பேர் சிறைச்சாலை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் 5 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,329 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 201 ஆக பதிவாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள் பணிபகிஷ்கரிப்பில்!

பொருளாதார பிரச்சினைக்கு, வரவு-செலவுத்திட்டம் மூலம் தீர்வு- வவுனியாவில் ஜனாதிபதி ரணில்

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா