உள்நாடு

நேற்று 14 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,313 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் நேற்றைய தினம்(22) 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்கும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட கைதி ஒருவருக்கும், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த மூவருக்கும், குவைட்டில் இருந்து வருகை தந்த 7 பேருக்கும், இந்திய நாட்டவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3118 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது 182 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகினறனர்.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் விளக்கமறியலில்

editor

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

editor

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு