உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 11 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(03) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமின் உறுப்பினர்கள் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய இருவரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சுமார் 104 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யானை விவகாரம் – 4 பேர் விடுதலை

நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு