உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(12) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேரில் 18 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய இருவரில் ஒருவர் கடற்படை உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனவும், மற்றைய நபர் டுபாயிலிருந்து வருகை தந்த நிலையில் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளதுடன், 514 பேர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

களனி கங்கையின் நீர் மட்டம் 4 அடியினால் உயர்வு…

வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை !

ஊரடங்கு உத்தரவினை மீறிய 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது