உள்நாடு

நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்

(UTV| கொவிட்-19)- நேற்றைய தினம்(15) நாட்டில் 16 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 6 பேரும் குவைட்டில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்ட 5 பேரும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பிய தலா ஒருவரும், கடற்படையை சேர்ந்த 3 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது இலங்கையில் 1905 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 552 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரிசி ஆலைகளின் சேவை மறு அறிவித்தல் வரை  அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

வீதிக்கு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள்

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீர்வெட்டு