உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று அடையாளம் காணப்பட்ட 22 கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(08) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுகுள்ளான 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 8 பேரும், சென்னையில் இருந்து நாடு திரும்பிய நான்கு பேரும் கடற்படையை சேர்ந்த 10 பேரும் அடங்குகின்றனர்.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1849 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 856 பேர் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றதுடன், வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 990 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்

கத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதியின் நலன் விசாரித்த பிரதமர்