வகைப்படுத்தப்படாத

நேபாளத்தில் மீட்கப்பட்ட 16 பேர் சென்னை திரும்பினர்

(UTV|INDIA)-சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தலைமையில் 23 பேர் கடந்த மாதம் நேபாள நாட்டில் உள்ள கைலாய மானசரோவர் யாத்திரை சென்றனர்.
அங்கு பலத்த மழை பெய்ததால் கடுமையான குளிர், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதில் குழுவாக சென்றவர்கள் பலரும் சிக்கிக் கொண்டனர். இதனால் சென்னையில் இருந்து சென்றவர்கள் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை மீட்க நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, நங்கநல்லூர் சுப்பிரமணியம் உள்பட 4 பேர் கடந்த மாதம் 30-ந் தேதி சென்னை திரும்பினர். 7 பெண்கள் உள்பட 19 பேரை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சிறிய ரக விமானங்கள் மூலமாக நேபாள அரசு உதவியுடன் 19 பேர் கொண்ட சென்னை குழுவினர் மீட்கப்பட்டு லக்னோவுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் தீனதயாளன் உள்பட 3 பேர் டெல்லி சென்றனர். மீதமுள்ள 16 பேர் லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்களை உறவினர்கள் கட்டித் தழுவி உற்சாகமாக வரவேற்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள்

மக்களுக்கு சேவை செய்ய பதவிகள் தேவை இல்லை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு