உள்நாடுவணிகம்

நெல்லை உடனடியாக அரிசியாக மாற்ற அனுமதி

(UTV | கொழும்பு) – நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை உடனடியாக அரிசியாக மாற்றவும் அதனை சதொச வலையமைப்பின் ஊடாக விநியோகிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு தொடர்ந்தும் எடுக்கவேண்டிய மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலையில் தற்போது சந்தையில் போதுமான அளவு அரிசி இருப்பு இல்லை என்பது குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தி மேற்கொள்ள ​வேண்டிய மாற்று நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடிய போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்

1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

editor

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!