அரசியல்உள்நாடு

நெல்லுக்கான விலையை அறிவித்த அரசாங்கம்

ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்முதல் செய்யும் விலைகளை அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் கே.டி.லால்காந்த,

“நாங்கள் உலர் நெல்லினையே கொள்வனவு செய்வோம். நாட்டரிசி நெல் ஒரு கிலோ கிராமை சந்தைப்படுத்தல் சபை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும்.

“ஒரு கிலோ கிராம் சம்பா நெல் 125 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும்.

“ஒரு கிலோ கிராம் கீரி சம்பா நெல் 132 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும்

“அரிசியின் விலை குறித்து சிந்தித்தும், விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளையும் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்றார்.

Related posts

வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.310 ஆக உயர்வு