வகைப்படுத்தப்படாத

நெதர்லாந்து தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது

(UTV|NETHER LAND) நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 05 ஆக உயர்ந்துள்ள நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபர் அந்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலின் பிற்பாடு 37 வயதுடைய கொக்மன் டனிஸ் (Gokmen Tanis), பெயருடைய துருக்கி நாட்டவரான குறித்த சந்தேக நபர் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 03 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

பணத்துக்காக 38 வயது பெண்ணை மணந்த அழகிய இளைஞன்!

කොළඹ වරායේ ගොඩකළ භූමි ප්‍රමාණය කොළඹ දිස්ත්‍රික් පරිපාලන ඒකකයට

14 வீரர்களுடன் சென்ற போர் விமானம் மாயம்