உலகம்உள்நாடு

நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் – 10 பேர் பலி

(UTV | கொழும்பு) –

மலேசியாவில் ​இடம்பெற்ற விமான விபத்தில் 10 பேர் பலியாகினர்.

மலேசியாவின் மேற்கு கரையோரம் உள்ள மாநிலம் செலங்கோரில் நேற்று 6 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்களுடன் சுபங்க் விமான நிலையம் நோக்கி ஜெட் வேலட் எனும் தனியார் ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் பயணித்தது.

இவ்விமானத்திற்கு மதியம் 02:48 மணியளவில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. மதியம் சுமார் 02:10 மணியளவில் தரையிறங்கும் சற்று நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்தின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஷா ஆலம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.

இவ்விபத்தில், விமானம் நெடுஞ்சாலையில் அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது விழுந்து நொறுங்கியது.

இதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். இதோடு விமானத்தில் பயணம் செய்த எட்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சமூக வலைதளங்களில் இவ்விபத்து குறித்து வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்களிலில் ஷா ஆலம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தீயுடன் புகை வந்து கொண்டிருப்பதும், விமானத்தின் பாகங்களும் தெரிகிறது.

வீதியில் விழுந்த விமானம் உடனடியாக வெடித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விமானத்தில் உயிரிழந்த பயணிகளில் ஜொஹாரி ஹாருண் எனும் அந்நாட்டின் அரசியல்வாதியும் ஒருவர்.

விபத்து குறித்து வருத்தம் தெரிவித்திருக்கும் பல முக்கிய பிரமுகர்களும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புத்தளத்துக்கு இரண்டு MP க்கள் – எழுச்சி மாநாட்டில் ரிஷாட் MP.

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா!

நாளை 24 மணிநேர நீர் விநியோகம் தடை