வகைப்படுத்தப்படாத

நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – ஸிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பளம் உரிய முறையில் வழங்கப்படாமை மற்றும் பொருத்தமற்ற வேலைக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கத் தலைவரான பீற்றர் மகொம்பெய் (Peter Magombeyi) தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை ஒழுங்கமைத்திருந்தார்.

தாம் மூவரால் கடத்தப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை அவரால் வட்ஸ்அப் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிற்சங்க தலைவரான பீற்றர் மகொம்பெய் கண்டுபிடிக்கப்படும் வரை தாம் பணிகளுக்குத் திரும்பப் போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஸிம்பாப்வே ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு அணிவகுத்து செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி

குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து – 18 இளைஞர்கள் பலி