வகைப்படுத்தப்படாத

நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட புழுதிப்புயல்

(UTV|INDIA)-இந்தியாவில் ஏற்பட்ட புழுதிப்புயலினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது.

வட இந்தியாவின் உத்தர் பிரதேஸ் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த புழுதிப்புயல் ஏற்பட்டிருந்தது.

கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இந்த புழுதிப்புயலின் தாக்கத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதிகபடியான மரணங்கள், அவர்களது வீடுகள் இடிந்து விழுவதை அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தமையாளேயே ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதிகளில் புழுதிப்புயல் வழமையாக ஏற்படும் ஒன்றாக இருக்கின்ற போதும், உயிர்கள் காவுக் கொள்ளப்படுவது அரிதாகவே இடம்பெற்றுள்ளது.

புழுதிப்புயலுடன் கடுமையான இடிமின்னல் தாக்கமும் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தமைக்கு காரணமாக அமைந்துள்ளது.

அதேநேரம் மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை

காஸ் கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாப பலி

கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி