சூடான செய்திகள் 1

நூறு கோடிக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஐவர் கைது

(UTV|COLOMBO)-கொள்ளுபிட்டியவில் உள்ள சொகுசு அடுக்கு மாடித்தொடர் வீடொன்றில் இருந்து 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் மூவர் வெளிநாட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் ஒன்றிணைந்து குறித்த நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் இருந்து 90 கிலோ நிறையுடைய 1080 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இருவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த 29 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும் ஏனைய நபர் 41 வயதுடைய ஆப்கானிஸ்தாக எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் ஹிக்கடுவ பகுதியை சேர்ந்த 41 மற்றும் 39 வயதுடைய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 கிலோ வீதம் 90 பெக்கட்டுகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தீர்மானமின்றி நிறைவடைந்த அமைச்சரவை கூட்டம் (UPDATE)

உலக வனாந்தர வார மாநாட்டில் ஜனாதிபதி இன்று விஷேட உரை

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு