உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் பனிக்கட்டிகள் விழுகின்றன

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனி விழுகிறது, ஆனால் இந்த முறை நுவரெலியாவில் காலை வேலையில் அதிக பனிதுலிகல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்நிலை நுவரெலியா நகர எல்லையில் சில இடங்களிலும், கந்தபொல பிரதேசத்திலும் கடந்த வருடம் பூக்களில் விழும் பனி நீரை கையால் சுழற்றிய போதும் இம்முறை உதிர்ந்த பனிக்கட்டிகளை சேகரித்து சில நிமிடங்கள் கையில் பிடிக்கக்கூடிய நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமையின் அடிப்படையில் நுவரெலியா பிரதேசத்தில் வெப்பநிலை 4 – 7 செல்சியஸ் பாகையாக ரை காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் இன்று (11) காலை 8.30 மணிக்கு மேல் கடும் குளிராகவும், மதியம் கடும் வெய்யிலாகவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுகாதார தொழிற்சங்கங்கள் திங்கள் முதல் பணிப்புறக்கணிப்பில்

தேர்தலுக்கு தமிழ் கட்சிகளின் ஆதரவே பெரும் காரணியாகும்!

விஜயகலாவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு