உள்நாடு

நுவரெலியாவில் தபால் நிலைய விற்பனைக்கு எதிராக பாரிய போராட்டம்!

(UTV | கொழும்பு) –

நுவரெலியா பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நுவரெலியா தபால் நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து, நாடு தழுவிய ரீதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பொன்றை தபால் ஊழியர்கள் ஆரம்பித்திருந்தார்கள். இந்த நிலையில், பணிப் பகிஷ்கரிப்பின் ஒரு அங்கமாக, நுவரெலியா நகரில் தற்போது பாரிய போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றனர். போராட்டம் காரணமாக நுவரெலியா நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்ய அரச செய்தி நிறுவனத்திடமிருந்தான அறிவிப்பு

நாளை நள்ளிரவுடன் பொதுத் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு

editor

ஸாகிரா கல்லூரி A/L பெறுபேறு பிரச்சினைக்கு இந்த வாரம் தீர்வு : கல்வியமைச்சர்