உள்நாடு

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் தொடர்பில் எச்சரிக்கை

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்லயிலிருந்து நானுஓயா வரையிலும், கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் ரம்பொடயிலிருந்து நுவரெலியா வரையிலும் வாகனங்களை செலுத்தும் போது முன்பக்க விளக்குகளை ஔிரவிட்டு வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை நிலவுவதுடன், அப்பகுதி முழுவதிலும் இருண்ட நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி வாக்குச்சீட்டை கிழித்தெறிந்த நபர் கைது

editor

இதுவரையில் 93,884 பேர் பூரண குணம்

ஜனநாயகத்திற்கு மரண அடி – மஹிந்த தேசப்பிரிய.