உள்நாடு

நுரைச்சோலை அனல்மின் நிலைய முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய அமைப்பிற்கு

(UTV | கொழும்பு) – திடீரென செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (26) பிற்பகல் முதல் தேசிய அமைப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

முதல் ஜெனரேட்டர் பழுதடைந்ததாலும், 2வது ஜெனரேட்டர் பழுதாகி நின்றதாலும் கடந்த 15ம் திகதி முதல் தற்போது வரை தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.

Related posts

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது

நீர் கட்டணத்துக்கு சலுகை காலம்

மீண்டும் முட்டை பிரச்சினை