வணிகம்

நுகர்வோர் அதிகார சபை களத்தில்

(UTV | கொழும்பு) – அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று(25) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில்லறை விலைக்கு அதிகமாக சில வர்த்தகர்கள் அரிசியை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை இதனை மேற்கொண்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைவாக நாட்டரிசி ஒரு கிலோவின் ஆக கூடிய விலை 96 ரூபாவாகும்.

சம்பா அரிசி கிலோ ஒன்றிற்கு 96 ரூபா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கீரி சம்பா ஒரு கிலோ 120 ரூபா எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வறட்சி நிவாரண கூப்பன் வழங்கும் கால எல்லை நீடிப்பு

உரத்தை இலவசமாக வழங்குவதற்கான உத்தேச திட்டம்

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் இறுதி நாள்