உள்நாடு

நீர் விநியோகம் சில மணித்தியாலங்களில் முழுமையாக வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் தடைப்பட்டிருந்த நீர் விநியோகம் சில பகுதிகளில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன் முழுமையாக வழமைக்கு திரும்ப மேலும் சில மணித்தியாலங்கள் செல்லும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை திருத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இன்று(27) நண்பகல் 12 மணியளவில் நீர் விநியோகம் ஓரளவு வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல், 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை முன்னர் தெரிவித்திருந்தது.

அதன்படி, கொழும்பு, கோட்டே, கடுவலை, தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

கோழி மற்றும் முட்டைகளுடன் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அணிவகுத்துச் செல்வோம்

ரயில் தடம்புரள்வு – வடக்கு புகையிரத சேவை பாதிப்பு

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் : பிரதமரிடம் ஆளுநர் கோரிக்கை