உள்நாடு

நீர் விநியோகத்தில் மின்சாரத்தை விட விவசாயத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் காலப்பகுதிக்கு தேவையான நீரின் அளவு பிரச்சினையின்றி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று(26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இயற்கை காரணங்களால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறையும் பட்சத்தில் மின்சாரத்திற்கான நீரை விநியோகிக்காமல் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தற்போதைய அரசாங்கம் பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor

அர்ச்சுனா MP யின் அதிரடி அறிவிப்பு – MP பதவி கௌசல்யாவிற்கு

editor

கப்ராலின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமனம்