சூடான செய்திகள் 1

நீர் வழங்கல் வாரியத்தின் முன்னாள் கணக்காளருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) தேசிய நீர் வழங்கல் வாரியத்தின் களனி பிரதேச அலுவலகத்தின் முன்னாள் கணக்காளரொருவருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(௦2) தீர்ப்பளித்துள்ளது.

இதன்போது , சந்தேகநபருக்கு 40 இலட்சம் ரூபாய் அபராதமும் மற்றும் தேசிய நீர் வழங்கல் வாரியத்திற்கு 130 இலட்சம் ரூபாய் நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டில் குறித்த அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிய ஆனந்த மாபோல, அதன் முகாமையாளரின் கையொப்பத்தை போலியான முறையில் பயன்படுத்தி அந்த வாரியத்துக்கு சொந்தமான 57 காசோலைகளில் 120 இலட்சம் ரூபாய்க்கும் அதிக தொகையை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மண்சரிவு அபாயம் -50 குடும்பங்கள் வெளியேற்றம்

எதிர்வரும் 09ம் திகதி தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பில்

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரருக்கு விளக்கமறியல்