சூடான செய்திகள் 1

நீர்ப்பாசன வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTV|COLOMBO) – மொரகஹகந்த – களுகங்கை வேலைத்திட்டதுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் ஏனைய நீர்ப்பாசன வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி, அவற்றின் நன்மைகளை குறித்த பிரதேச விவசாய மக்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொரகஹகந்த – களுங்கங்கை வேலைத்திட்டத்தினூடாக வடமத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு தூய குடிநீர் வழங்குதல் மற்றும் பயிர்ச்செய்கைக்கான நீரினை வழங்குதல் நோக்காக கொண்டுள்ளது.

மொரகஹகந்த – களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை பாராட்டும் முகமாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதியின் தலைமையில் மொரகஹகந்த வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

சபாநாயகர் இன்று வடபகுதிக்கு விஜயம்

மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம்

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைப்பு