சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவு…

(UTV|COLOMBO) கடந்த சில மாதங்களாக மலையகத்தில் கடும் வரட்சி நிலவி வருவதால் மவுசாகலை, காசல்ரீ, கென்யன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டமானது 66 அடியாகவும் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர்மட்டம் 48 அடியாகவும் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 34 அடியாகவும் குறைவடைந்துள்ளதனால், மின் உற்பத்திசெய்யும் அளவு குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

கடும் வரட்சி காரணமாக மேலும் நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளதுடன் வரட்சியான காலநிலை தொடரும் நிலமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொதி மீட்பு

ஓரின சேர்க்கையால் ஏற்பட்டுள்ள மோதல்

இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணியமாட்டேன் –  ரிஷாத்