சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் நிலவுகின்றன மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களனி, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக மழை தொடரும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் உயர்வடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் மாலா அலவதுவல தெரிவித்துள்ளார்.

காசல்ரீ மற்றும் மவுஸாகலை நீர்த்தேக்க பகுதிகளில் பெய்யும் கடும்மழை காரணமாக குறித்த நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுக்கும் நிலையை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, தொடரும் மழையுடன் கூடிய காலநினை காரணமாக இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் வாழ்வோரை, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்…

தவணைப் பரீட்சை பெறுபேறுகள் விடுமுறைக்கு முன்னர்

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு