சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்ததுள்ளது

(UTV|COLOMBO) நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைந்து வருவதாக, மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீர்மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் நாள்களில் மழைவீழ்ச்சி பதிவாகுமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்ட போதிலும், எதிர்பார்த்த மழை வீழ்ச்சி பதிவாகாவிடில், நீர் மின்னுற்பத்தியில் பாரிய சவால்களை எதிர்​கொள்ள நேரிடுமென்று சுலக்ஷன மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

ரணிலுக்கு ஆதரவாக பாராளுமன்றில் இன்று முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கைப் பிரேரணை

இன்றைய வானிலை…

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் இரத்து