உள்நாடு

நீர்கொழும்பு உணவகம் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் சரண்

(UTV|நீர்கொழும்பு )- கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் இன்று(10) பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

சட்டத்தரணிகளின் ஊடாக அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இன்று(10) காலை 18 வயதுடைய நீர்கொழும்பு, பெரியமுல்ல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெலிசர விபத்து – தந்தை, மகனுக்கு விளக்கமறியல்

கல்வி அமைச்சின் ஆலோசனைகளில் திருத்தங்கள்

பாராளுமன்றத்தில் மிக முக்கிய பதவி வேலு குமார் எம் பீ க்கு