உள்நாடு

நீர்கசிவு காரணமாக கடலில் மூழ்கும் MV Xpress pearl

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த எம்வி எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பல், நீர்க்கசிவு காரணமாக தற்போது கடலில் மூழ்கி வருவதாக இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தீயால் எரிந்துப் போன இந்தக் கப்பலை ஆழ்கடலுக்கு இட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி நேற்று(01) பணித்தார்.

இதற்காக கப்பல் நங்கூரமிட்டுள்ள இடத்துக்கு கடற்படையின் விசேட குழு ஒன்று இன்று காலை சென்றிருந்தது.

எனினும் இந்த கப்பல் தற்போது கடலில் மூழ்கிச் செல்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த கப்பலில் இருந்து பெருமளவான எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், அவ்வாறு எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதன் விளைவாக திக்வோவிட்ட பிரதேசம் முதல் நீர்கொழும்பு – கெபுன்கொட பிரதேசம் வரையிலான கடற்பகுதியில் எண்ணெய் படிமங்கள் மிதக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

மாவைக்கு சம்பந்தன் கோரிக்கை

இன்று முதல் ரஷ்யாவுக்கான தபால் ஏற்பு

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா