உள்நாடு

நீரோடைக்குள் தவறி வீழ்ந்து 4 வயது சிறுமி பலி – புத்தளத்தில் சோகம்

புத்தளம் – தங்கொட்டுவ, யோகியான வேகொட பகுதியில் பாலர் பாடசாலை மாணவியொருவர் நேற்று (08) தனது வீட்டிற்கு பின்புறமாக உள்ள பாதுகாப்பற்ற நீரோடைக்குள் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனன்யா பரமி (வயது 4) எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சிறுமி பாலர் பாடசாலைக்கு சென்றுவிட்டு தனது பாட்டியுடன் வீட்டுக்கு திரும்பியதாகவும், வீட்டுக்கு வந்த சிறுமியை குளிப்பாட்டுவதற்காக பாட்டி சுடுநீர் தயார் செய்ய சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாட்டி அடுப்பில் சுடுநீர் வைப்பதற்காக சென்ற சமயம் குறித்த சிறுமி யோகட் சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையில், வெளியே சென்ற சிறுமி தனது வீட்டுக்கு பின்பக்கமாக உள்ள பாதுகாப்பற்ற நீரோடைக்குள் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற போது சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஷிரான் பெரேராவின் தலைமையில் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கரையோர ரயில் பாதையில் ரயில்கள் தடம்புரள்வது ஏன்?

யாழ்.மாணவி கொலை – கணவனுக்கு விளக்கமறியல்

சுசந்திகாவுக்கு புதிய பதவி