சூடான செய்திகள் 1

நீரழிவு நோயை முற்றாக குணப்படுத்த முடியாது?

(UTV|COLOMBO)-நீரழிவு நோயை முற்றாக குணப்படுத்த முடியாது என விசேட வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
நீரழிவு நோயை முற்றாக குணப்படுத்த முடியும் என்று பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்களில் எந்த உண்மையும் கிடையாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்கள்.

வைத்திய நிபுணர் டொக்டர் பிரியங்கர ஜயவர்த்தன கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்திய நிபுணர் டொக்டர் சந்திரிகா விஜயவர்த்தன ஆகியோர் அங்கு கருத்து வெளியிட்டார்கள்.

இவ்வாறான விளம்பரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி இலங்கை மருத்துவ பேரவை கவனம் செலுத்தியுள்ளது.

போலி விளம்பரங்களினால் ஏமாற்றப்படும் அதிகளவு நோயாளர்கள் மீண்டும் மேற்கத்தேய மருத்துவ முறையை நாடுகின்றார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

 

 

 

 

Related posts

சிங்கராஜ வனம் இரண்டாக பிரியும் அபாயம்…

தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு அரசியல் பழிவாங்கல் மாத்திரமே…

பாராளுமன்றில் தற்போது ஆரம்பித்துள்ள கூட்டம்