உள்நாடுசூடான செய்திகள் 1

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாது

(UTVNEWS | கொழும்பு) -நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை தற்போதைய நிலையில் நடத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய உடனடியாக சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை கேட்டுள்ளது.

அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தலை நடத்துவது குறித்து உயர் நீதிமன்றத்தின் வியாக்கியனத்தை கேட்குமாறு ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் குறித்து ஜனநாயகத்தை மதிக்கம் அனைவரும் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை தமது கட்சி பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளதோடு, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை தற்போதைய நிலையில் நடத்த முடியாது எனவும் அவர் கேட்டுள்ளார்.

ஆகவே இது தொடர்பில் கலந்துரையாடவே சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு தான் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

editor

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு