உள்நாடு

நீதிமன்றில் டயானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, ​​டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நீதிமன்றில் முன்னிலையாகி இந்த மனு தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதற்கு திகதி வழங்குமாறு கோரினார்.

அதன்படி, மனுவை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு விசாரணைக்கு கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்டோர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related posts

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு அடுத்த வாரம் – ஜீவன் தொண்டமான்.

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலுக்கு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான தகவல் | வீடியோ

editor