சூடான செய்திகள் 1

நீதிமன்றின் தீர்ப்பு..

(UTV|COLOMBO)-மதுவரி திணைக்கள சட்டத்தின் கீழ் வழக்கு தொடர காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாக கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுவரி திணைக்கள அதிகாரிகள் இன்றி காவல்துறை அதிகாரிகளுக்கும், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

அத்துடன், சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாக கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

கம்பஹா காவல்துறையினரால் ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டார்.

அதன்போது, கசிப்பு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என்று பிரதிவாதி சார்பான சட்டத்தரணி வாதிட்டார்.

எனினும் அதனை நிராகரித்த நீதவான், மதுவரி திணைக்கள சட்டத்தின் கீழ் வழக்கு தொடர காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளதாக அறிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நாளை பாண்டியன்குளத்தில் உயர்மட்டக் கூட்டம்

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்

பெண்ணின் கருப்பையை அகற்றுவது என்பது உணர்வுப்பூர்வமான விடயம் – சம்பிக ரணவக