சூடான செய்திகள் 1

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது

(UTV|COLOMBO) நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதிபதிகளால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானித்துள்ள நீதிமன்றம் விசாரணை திகதியை வௌ்ளிக்கிழமை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ஹூதிகளுக்கு எதிராக இலங்கை கடற்படை கப்பல்கள்: விஜயபாகு – கஜபாகு கடற்படைக் கப்பல்கள் தயார்

வைரஸ் நோய் கட்டுப்பாட்டுக்குள்

இன்றும் பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை