சூடான செய்திகள் 1

நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான பேரவை …

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று கூடியது.

உயர் நீதிமன்றத்திலும், மேன் முறையீட்டு நீதிமன்றத்திலும் நிலவும் நீதிபதிகளுக்கான வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை நியமிப்பது பற்றி பேரவையில் விரிவாக ஆராயப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிகளுக்காக ஜனாதிபதி நான்கு பெயர்களை முன்மொழிந்திருந்தார். இந்தப் பெயர்களில் ஒருவருக்கு பேரவையின் அங்கீகாரம் கிடைத்ததுபதவிக் காலம் முடிவடைந்த சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய அங்கத்தவர்களை நியமிப்பது பற்றியும் ஆராயப்பட்டது. இந்தக் ஆணைக்குழுக்கள் மிகவும் சிறப்பாகஇ செயற்திறன் வாய்ந்த முறையில் செயற்படுவதால்இ 80 வயது என்ற உச்சவரம்புக்கு உட்பட்டவாறு சமகால உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீடிப்பதென யோசனை கூறப்பட்டது. இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்மானம் எட்டுவதென தீர்மானிக்கப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

15 மில்லியனை செலுத்திய மைத்திரி  : அவரின் மாத வருமானம் இதோ

கொடூரமாக கொலை செய்யப்பட 19 வயது இளைஞன்

சுகாதார அமைச்சர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை