உள்நாடு

நீதவான் சரவணராஜா விவகாரம் – BASL கண்டனம்.

(UTV | கொழும்பு) –

நீதித்துறை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் இடம்பெறுவதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்(BASL) வன்மையாகக் கண்டித்துள்ளது. முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) விடுத்துள்ள அறிக்கையிலே​யே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக அறிக்கையை BASL தலைவர் கௌசல்யா நவரத்ன மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீதவானின் இராஜினாமா இலங்கையில் நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பக்கூடும் என்று BASL எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, இச்சம்பவம் குறித்து முழுமையான பாரபட்சமற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை BASL வலியுறுத்துகிறது.முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜா தனது பதவி விலகல் அச்சுறுத்தல் காரணமாகவே பதவி விலகுவதாகக் கூறி நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், நீதித்துறையின் அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் உறுதியளித்துள்ளதாக BASL தெரிவித்துள்ளது.
“நீதிபதிகள் பயம் அல்லது மிரட்டல் இல்லாமல் தங்கள் கடமைகளை ஆற்றக்கூடிய சூழலை பராமரிப்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று BASL அறிக்கை மேலும் கூறியது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வலுக்கும் கொரோனாவும் தொடரும் முடக்கங்களும்

ரயில் சேவையில் பாதிப்பு

இன்று நடைபெறும் பரீட்சை!