அரசியல்உள்நாடு

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்போம் – அநுர

மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்பேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாவத்தகம பிரதேசத்தில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், “நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம். 21ஆம் திகதி எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் கவலையடைவார்கள்.

எங்கள் ஆட்சியில் சிறிது காலம் கழித்து, திசைக்காட்டிக்கு வாக்களித்திருக்கலாமே என்று அவர்களுக்கு எண்ணத் தோன்றும். ஏனைய கட்சிகளையும் வென்றெடுக்கும் வகையில் ஆட்சி அமைக்க வேண்டும்” என்றார்.

Related posts

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

editor

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா நாட்டை விட்டு வௌியேறினாரா ?

editor

லெபனான் வெடிப்புச் சம்பவம்- இலங்கை தூதரகத்திற்கு சேதம்