உள்நாடு

நீங்களும் மேல்மாகாணத்தில் உள்ள கொரோனா தொற்றாளரா?

(UTV | கொழும்பு) – கொரோனா நோயாளர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் வீடுகளில் வைத்து முகாமை செய்தல் ஆகியவற்றுக்காக மேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் புதிய முறைமை ஒன்று கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (19)முதல் அமுலாகும் வகையில் துரித அழைப்பு மற்றும் குறுந்தகவல் சேவை முறைமை ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.

அதற்கமைய நோயாளிகள் கீழ்வரும் தகவல்களை உள்ளீடு செய்து 1904 என்ற இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பி வைக்க முடியும்.

சுவாசக் கோளாறுகளை கொண்டுள்ள நோயாளர்கள் A எனவும்
காய்ச்சல் கொண்டுள்ள நோயாளர்கள் B எனவும்
எவ்வித நோய் அறிகுறிகளும் கொண்டிராத நபர்கள் C எனவும்
குறிப்பிட்டு சிறிய இடைவெளிவிட்டு வயது (இடைவெளி) தேசிய அடையாள அட்டை எண் (இடைவெளி) முகவரி என்பவற்றை உள்ளீடு செய்து மேற்கண்ட இலக்கத்துக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உதாரணம் : A<Space>24<Space>000000000V<Space>12/8Colombo

குறுந்தகவல் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம், நோயாளர்களை சிகிச்சை மையங்களுக்கு அனுப்புவது தொடர்பில் மருத்துவர்களுக்கு அறிவிக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசு முஸ்லிம் அரசியல்வாதிகளை வேட்டையாடுகிறது [VIDEO]

மகாநாயக்கர்களின் யோசனை குறித்து ஜனாதிபதி கடிதம்

மஹிந்த – பசில் ஆகியோருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை நீடிப்பு