உள்நாடு

நில அதிர்வுகளை கண்காணிக்க மேல்மாகாணத்திலும் மையம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல் மாகாணத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டை அண்மித்த சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

லுணகம்வேஹர பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் நாட்டில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், அவ்வாறான எந்த தகவல்களையும் நிபுணர் குழு தமக்கு அறிவிக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

Related posts

எதிர்வரும் 07ம் திகதி ‘கருப்பு ஞாயிறு’

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

பொலிஸார் மீது மோதி தப்பிச்சென்ற டிப்பர் சாரதி விளக்கமறியலில்