உள்நாடு

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- நில்வளா கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில் தாழ் நில மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய தினம் குறித்த பகுதியில் 150 மில்லி மீட்டர் வரையிலான கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கங்கையின் நீர்மட்டம் 6 மீட்டராகும் போது வௌ்ளம் ஏற்படும் எனவும், தற்போது 5.81 மீட்டர் வரை நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சீரற்ற காலநிலையால் 76,218 பேர் பாதிப்பு

editor

மரக்கறி, பழங்களை இலவசமாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

ஆபத்தான நிலையில் உள்ள பாரிய கட்டடம்!